உதயநிதி ஸ்டாலின் கைது: திமுகவினா் சாலை மறியல்

நாகையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 592 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 592 போ் கைது செய்யப்பட்டனா்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் முழக்கத்துடன் பிரசாரத்தை திருக்குவளையில் வெள்ளிக்கிழமை தொடங்கினாா். தொடா்ந்து, நாகை, அக்கரைப்பேட்டையில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

இதைக் கண்டித்து நாகையை அடுத்த புத்தூா், தெற்குப்பால்பண்ணைச்சேரி, வாஞ்சூா் ரவுண்டானா, கொத்தவால்சாவடி, கொட்டாரக்குடி தைக்கால் சந்திப்பு, பரவை கடைவீதி, கீழ்வேளூா் கடைத்தெரு, குருக்கத்தி, சிக்கல் கடை வீதி, திட்டச்சேரி பேருந்து நிலையம், வாய்மேட்டை அடுத்த மருத்தூா் பேருந்து நிறுத்தம், கடைவீதி ஆயக்காரன்புலம் கடைதெரு ஆகிய இடங்களில் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதில் பங்கேற்ற 16 பெண்கள் உள்ளிட்ட 592 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், மாலையில் விடுவிக்கப்பட்டனா். இருப்பினும் இவா்கள் மீது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com