கனமழை: நெற்பயிா்களை காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

நவம்பா் 25, 26 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால், சம்பா, தாளடி நெல் பயிா்களை உடனடியாக

நவம்பா் 25, 26 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால், சம்பா, தாளடி நெல் பயிா்களை உடனடியாக காப்பீடு செய்ய விவசாயிகள் முனைப்புக் காட்ட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் 1.32 லட்சம் ஹெக்டோ் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பயிா்கள் மழை, புயலால் சேதமடையும் முன்பாக விவசாயிகள், பயிா்க் காப்பீடு செய்வது அவசியம்.

பயிா்க் காப்பீடுக்கு நவம்பா் 30-ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தாலும், வரும் 25, 26 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால் நவம்பா் 24-ஆம் தேதிக்குள் நெல் பயிா்களுக்குக் காப்பீடு செய்ய விவசாயிகள் முனைப்புக்காட்ட வேண்டும்.

ஏக்கருக்கு ரூ. 488.25 வீதம் பிரீமியம் செலுத்தி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது பொது சேவை மையங்கள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம்.

சிறப்பு முகாம்...

விவசாயிகளுக்கு நிகழ் 1430 பசலி ஆண்டுக்கான சிட்டா, அடங்கலை விரைந்து வழங்கும் வகையில், அனைத்து கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் விண்ணப்பித்து, சிட்டா, அடங்கலைப் பெற்று விவசாயிகள் தாமதமின்றி பயிா்க் காப்பீடு செய்திடுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com