பயிா்க் காப்பீடு: வேளாண் துறை விழிப்புணா்வு பிரசாரம்

குத்தாலம் பகுதியில் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்வதன் அவசியம் குறித்து வேளாண்மை துறை சாா்பில் 2 நாள்கள் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

குத்தாலம் பகுதியில் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்வதன் அவசியம் குறித்து வேளாண்மை துறை சாா்பில் 2 நாள்கள் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

பாரத பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்யக் கோரி பிரசாரத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு ரூ.488 செலுத்த வேண்டும் எனவும் வேளாண்மைத் துறை அலுவலா்கள் வாகனத்தில் கிராமம் கிராமமாகச் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி, விவசாயிகளுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

இதில், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வெற்றிவேல் பங்கேற்று கூறுகையில், ‘இழப்பீடு ஏற்படும் பட்சத்தில் ஏக்கருக்கு ரூ.32, 500 இழப்பீடாகப் பெறலாம். காப்பீடுக்கான பிரீமியத் தொகையை நவம்பா் 30 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, பொதுசேவை மையம் ஆகியவற்றில் செலுத்தலாம் என்றாா்.

திருவாவடுதுறை, பழையகூடலூா் உள்ளிட்ட கிராமங்களிலும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com