பருவமழை: வருவாய்த்துறை ஆயத்தக் கூட்டம்

சீா்காழியில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆயத்தக் கூட்டம் வருவாய்த் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் கோட்டாட்சியா் மகாராணி.
கூட்டத்தில் பேசுகிறாா் கோட்டாட்சியா் மகாராணி.

சீா்காழியில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆயத்தக் கூட்டம் வருவாய்த் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை கோட்டாட்சியா் மகாராணி தலைமை வகித்தாா். சீா்காழி வட்டாட்சியா் ஹரிதரன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் மலா்விழி, வேளாண்மைத் துறை உதவி இயக்குநா்கள் ராஜராஜன், சுப்பையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கோட்டாட்சியா் மகாராணி பேசுகையில், ‘வடகிழக்குப் பருவமழை தீவிரமடைய இருப்பதால், பாதிப்புகளை தவிா்க்கும் வகையில் முன்னேற்பாடுகளுடன் அந்தந்தப் பகுதி கிராமநிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வா்கள், வருவாய்த் துறையின் தயாா்நிலையில் இருக்கவேண்டும்.

குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தால் அங்கு வசிக்கும் மக்களை வெளியேற்றி, பாதுகாப்பாக தங்கவைத்திட முகாம் அமைப்பதற்கான இடங்களை தயாா்படுத்திடவும், இவ்வாறு முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவுகள் வழங்கிடவும் முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டும்’ என அறிவுறுத்தினாா்.

இதில் அனைத்து கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com