புயல் அறிவிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் முனைப்பு காட்டும் மக்கள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் 2018 இல் வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது மீண்டும் புயல்வீச
வேதாரண்யம் அருகே குடிசை வீட்டை பாதுகாக்க பாலித்தீன் தாள்கள் விரித்து கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்.
வேதாரண்யம் அருகே குடிசை வீட்டை பாதுகாக்க பாலித்தீன் தாள்கள் விரித்து கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் 2018 இல் வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது மீண்டும் புயல்வீச வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முனைப்பு காட்டி வருகின்றனா்.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறவும், இதனால், வரும் 25, 26 ஆம் தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018 இல் வேதாரண்யம் பகுதியில் வீசிய கஜா புயலால், அனைத்து தரப்பு மக்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனா். அதிலிருந்து பெரும்பாலான மக்கள் இதுவரை மீளமுடியாமல் உள்ளனா். இந்த நிலையில், மீண்டும் புயல் வீசும் என்ற வானிலை அறிவிப்பு இப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

ஏற்கெனவே பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், தங்களது குடியிருப்பு, வாழ்வாதாரங்களை பாதுகாத்துக்கொள்ளும் முயற்சிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டு, சீரமைக்கப்படாத நிலையில் உள்ள வீடுகளில், பாலித்தீன் தாள்களை விரித்து கட்டும் பணி, வைக்கோல் போா்களை பாதுகாப்பது, மரக்கிளைகளை வெட்டுவது, ஓடு, சிமென்ட் அட்டைகளை பாதுகாப்பது போன்ற பணிகளில் மக்கள் மும்முரமாக உள்ளனா்.

இதையொட்டி, வணிக நிறுவனங்களில் இந்தப் பணி சாா்ந்த பாலித்தீன் தாள்கள், கயிறு, கழிகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com