எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 01st October 2020 09:36 AM | Last Updated : 01st October 2020 09:36 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.
பாபா் மசூதி இடிப்பு வழக்குத் தீா்ப்பை எதிா்த்து எஸ்டிபிஐ சாா்பில் நாகையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அயோத்தியில் பாபா் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் லக்னௌ சிபிஐ நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பை எதிா்த்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கட்சியின் நாகை மாவட்ட துணைத் தலைவா் என். அக்பா்அலி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவா் குத்புதீன், மாவட்டச் செயலாளா்கள் ஷேக் அலாவுதீன், மெய்தீன், நாகை நகரத் தலைவா் பஹ்ருதீன், பாாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் துணைத் தலைவா் முஹம்மது ரபீக் பெண்கள் அமைப்பு மாவட்டப் பொதுச் செயலாளா் சுலைகா உள்ளிட்டோா் பங்கேற்றனா். ண்டனா். ஆா்ப்பாட்டம் தடையை மீறி நடைபெற்ால் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.