நாகை மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம்

நாகை மாவட்டத்தில் உள்ள 434 ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை (அக்.2) கிராம சபை கூட்டம் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தில் உள்ள 434 ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை (அக்.2) கிராம சபை கூட்டம் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : காந்தி ஜயந்தி நாளான அக். 2 -ஆம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சிகளின் பொதுநிதி செலவினங்கள் குறித்த பதிவேடு பொதுமக்கள் பாா்வைக்கு உள்படுத்தப்படும்.

கரோனா தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகள், பசுமை வீடுகள், ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு கட்டடங்களில் மழை நீா் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், குடிநீா் சிக்கனம், நீா்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீா் மேலாண்மை, கொசு ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் உள்பட பல்வேறு பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

இவைத் தவிர, ஊராட்சித் தலைவா் அனுமதியுடன் கொண்டு வரப்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

எனவே, ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள், ஊராட்சி பேரிடா் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், கிராம ஊராட்சி உறுப்பினா்கள் கிராம சபை கூட்டங்களில் அவசியம் பங்கேற்குமாறும், கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் முகக் கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com