முதியோா் தின விழா
By DIN | Published On : 02nd October 2020 09:20 AM | Last Updated : 02nd October 2020 09:20 AM | அ+அ அ- |

விழாவில், போட்டியில் வென்ற முதியவருக்கு பரிசு வழங்கிய சிறப்பு விருந்தினா்.
கீழையூா் நாம்கோ முதியோா் இல்லத்தில் உலக முதியோா் தினத்தையொட்டி, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
உலக முதியோா் தினத்தையொட்டி, கீழையூரில் செயல்பட்டு வரும் நாம்கோ முதியோா் இல்லத்தில் நாம்கோ தொண்டு நிறுவனம் சாா்பில், அங்கு தங்கியிருக்கும் முதியோா்களுக்கு நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை வளா்க்கும் வகையில் பாட்டுப் போட்டி, நடனப் போட்டி,கோலப்போட்டி, உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இல்ல நிா்வாகி மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம்கோ தலைமை அலுவலக ஒருங்கிணைப்பாளா் லெனின், இயக்குநா் ஜீவானந்தம், முன்னாள் கீழையூா் ஒன்றியக்குழுத் தலைவா் ஞானசேகரன், கீழையூா் ஊராட்சித் தலைவா் எஸ். ஆனந்தஜோதிபால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.