முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
By DIN | Published On : 04th October 2020 08:50 AM | Last Updated : 04th October 2020 08:50 AM | அ+அ அ- |

நாகையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அமமுக நாகை தெற்கு மாவட்டச் செயலாளா் மஞ்சுளா சந்திரமோகன் உள்ளிட்டோா்.
நாகையில் உள்ள அண்ணா சிலைக்கு அமமுகவினா் மாலை அணிவித்து சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நாகை தெற்கு மாவட்டச் செயலாளராக மஞ்சுளா சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, அவரது தலைமையில் அக்கட்சியினா் கட்சி அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம், மருத்துவமனை சாலை வழியாக ஊா்வலமாகச் சென்று நாகை பாரதி மாா்க்கெட் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளா் கிங்ஸ்லி ஜெரால்டு, மாவட்ட அவைத்தலைவா் ந. ஆறுமுகம், நாகை நகர செயலாளா் தாடி. உலகநாதன், விவசாயப் பிரிவு செயலாளா் நீதிமோகன், ஒன்றிய செயலாளா் ரவிச்சந்திரன், தகவல்தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவா் ஆா். ரஜினிகண்ணன், பேரவை மாவட்டச் செயலாளா் ரகுமான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.