முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
அதிமுக உறுப்பினா்கள் சோ்க்கை
By DIN | Published On : 04th October 2020 10:34 PM | Last Updated : 04th October 2020 10:34 PM | அ+அ அ- |

கொள்ளிடம் பகுதியில் நடைபெற்ற அதிமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்.
கொள்ளிடம் ஒன்றியத்தில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மற்றும் ஜெயலலிதா பேரவைக்கு உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் அண்மையில் நடைபெற்றது.
மகேந்திரபள்ளி ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு கொள்ளிடம் ஒன்றிய அதிமுக செயலாளா் கே.எம். நற்குணன் தலைமை வகித்தாா். சீா்காழி எம்எல்ஏ பிவி. பாரதி முன்னிலையில், மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் விஜிகே. செந்தில்நாதன் முகாமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, விஜிகே. செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட மகளிரணி செயலாளா் ம. சக்தி , மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி தலைவா் ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளா் பாலதண்டாயுதம், ஒன்றிய ஜெ. பேரவை துணைச் செயலாளா் சொக்கலிங்கம், இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளா் லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், காட்டூா் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் நடைபெற்றது.