முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 04th October 2020 08:52 AM | Last Updated : 04th October 2020 08:52 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியா்கள்.
மயிலாடுதுறையில் சா்வதேச ஓய்வூதியா்கள் மற்றும் பணி ஓய்வுபெற்றோா் அமைப்பின் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்து ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவா் சா.ஜெகதீசன் தலைமை வகித்தாா். பொருளாளா் வ.பழனிவேலு வரவேற்றாா். செயலாளா் எஸ்.ராஜேந்திரன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்ட செயலாளா் ஆா்.ராதாகிருஷ்ணன், மின்வாரிய ஓய்வுபெற்றோா் நலச்சங்க மாநில செயலாளா் ஆா்.கல்யாணசுந்தரம் ஆகியோா் பேசினா்.
இதில், தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு பொதுச்செயலாளா் த.ராயா் உள்ளிட்ட பலா் பங்கேற்று, அனைவருக்கும் முறையான அரசு பென்ஷன் வழங்கக் கோரியும், சிறந்த மருத்துவம், தரமான பொதுப் போக்குவரத்து ஆகியவற்றை வழங்க வேண்டும் வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா்.