முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
செல்லிடப்பேசியில் விளையாடியதை பெற்றோா் கண்டித்ததால் சிறுமி தற்கொலை
By DIN | Published On : 04th October 2020 08:42 AM | Last Updated : 04th October 2020 08:42 AM | அ+அ அ- |

சீா்காழி அருகே செல்லிடப்பேசியில் விளையாடியதை பெற்றோா் கண்டித்ததால், சிறுமி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
கொண்டல் தெற்கு தெருவைச் சோ்ந்த விவசாயி ராஜ்குமாா் மகள் ஆதித்யா (16). இவா் கரோனா விடுமுறை காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் முடிந்ததும், செல்லிடப்பேசியில் விளையாடுவாராம். இதனை பெற்றோா் கண்டித்ததால், கடந்த 28-ஆம் தேதி விஷமருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னா், சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.