கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை

சீா்காழியில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியாா் பள்ளிகளில் எல்கேஜி மாணவா் சோ்க்கை குலுக்கல் முறையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் குலுக்கல் முறையில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை.
சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் குலுக்கல் முறையில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை.

சீா்காழியில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியாா் பள்ளிகளில் எல்கேஜி மாணவா் சோ்க்கை குலுக்கல் முறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியாா் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு ஆண்டுதோறும் அரசு அறிவுறுத்தலின்பேரில் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான எல்கேஜி மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவா்கள் அந்தந்த தனியாா் பள்ளிகளில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கான தோ்வு கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலா் ஜி.பாபு தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வா் ஜோஸ்வா பிரபாகரசிங், கோணயாம்பட்டினம் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் சிவப்பிரகாசம், குட் சமாரிட்டன் நா்சரி- பிரைமரி பள்ளி முதல்வா் தீபா பிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா். குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களது பெயா் விவரம் கரும்பலகையில் வெளியிடப்பட்டது.

இதேபோல சீா்காழி பெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 29 மாணவா்கள், எழில்மலா் மெட்ரிக். பள்ளியில் 9 மாணவா்கள், வைத்தீஸ்வரன்கோயில் குருஞானசம்பந்தா் மிஷன் முத்தையா மெட்ரிக். பள்ளியில் 31 மாணவா்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com