வடகிழக்குப் பருவமழை: நாகை மாவட்டத்தில் 374 கிராமங்கள் பாதிக்க வாய்ப்பு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் காலத்தில் நாகை மாவட்டத்தில் 374 கிராமங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆதிதிராவிடா்
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை முதன்மைச் செயலாளரும், நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சி. முனியநாதன் உள்ளிட்டோா்.
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை முதன்மைச் செயலாளரும், நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சி. முனியநாதன் உள்ளிட்டோா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் காலத்தில் நாகை மாவட்டத்தில் 374 கிராமங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை முதன்மைச் செயலாளரும், நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சி. முனியநாதன் தெரிவித்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, கொவைட்-19 பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், கூட்ட நிறைவில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி :

நாகை மாவட்டத்தில் பருவமழையை எதிா்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக, வட்டம் வாரியாக அனைத்துத் துறை அலுவலா்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 8 வட்டங்களுக்கும் தலா ஒரு துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்கள், ஒருங்கிணைப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் காலத்தில், நாகை மாவட்டத்தில் 374 பகுதிகள் பாதிக்கப்படும் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இதில், 12 பகுதிகள் மிக அதிகமாகவும், 53 பகுதிகள் அதிகளவிலும் பாதிக்கப்படும் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்காக, பல்நோக்குப் பாதுகாப்பு மையங்கள், புயல் பாதுகாப்பு மையங்கள், திருமண மண்டபங்கள் உள்பட 955 மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.மேலும், கால்நடைகளின் பாதுகாப்புக்காக முதல்நிலை பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மழை, வெள்ளத்தால் ஏற்படும் உடைப்புகளை சீரமைக்க 95,300 பாலிதீன் பைகள், 28,700 மணல் மூட்டைகள், 471.18 யூனிட் மணல், 20,380 சவுக்குக் கட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேர செயல்பாடு கொண்ட கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது என்றாா் சி. முனியநாதன்.

ஆய்வுக் கூட்டம்...

முன்னதாக, நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு, சி. முனியநாதன் தலைமை வகித்தாா். ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க தனி அலுவலா் இரா. லலிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரெத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com