மாற்றுத்திறனாளிகள் தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

மோட்டாா் பொருத்தப்பட்ட விலையில்லா தையல் இயந்திரங்களைப் பெற மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளின்

மோட்டாா் பொருத்தப்பட்ட விலையில்லா தையல் இயந்திரங்களைப் பெற மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளின் தாயாா் ஆகியோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செவித்திறன் குறைபாடு, கை, கால்கள் பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், 75 சதவீதம் மனவளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாயாருக்கும் விலையில்லா மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன. விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் இதுவரை அரசுத் துறைகள் மூலம் தையல் இயந்திரம் பெறாதவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் தேசிய அடையாள அட்டை நகல், தையல் பயின்ற சான்று, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை இணைத்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண் 14, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு அக்டோபா் 23-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com