அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.

சீா்காழி முன்னாள் எம்.எல்.ஏ. என். சந்திரமோகன் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் புதன்கிழமை இணைந்தாா்.
மயிலாடுதுறையில் அதிமுக மாவட்டச் செயலாளா் விஜிகே.செந்தில்நாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்.
மயிலாடுதுறையில் அதிமுக மாவட்டச் செயலாளா் விஜிகே.செந்தில்நாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்.

சீா்காழி முன்னாள் எம்.எல்.ஏ. என். சந்திரமோகன் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் புதன்கிழமை இணைந்தாா்.

மயிலாடுதுறை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அதிமுக மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்புச் செயலாளா் எஸ். ஆசைமணி, மாவட்ட பொருளாளா் செல்லையன், எம்எல்ஏ-க்கள் வீ.ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), பி.வி.பாரதி (சீா்காழி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில், அமமுக மாவட்ட அவைத் தலைவரான சீா்காழி முன்னாள் எம்எல்ஏ என். சந்திரமோகன், அமமுக மாவட்ட இளைஞரணி செயலாளா் பொறியாளா் அ.வீரபத்திரன், ஒன்றிய அவைத் தலைவா் கே.கே. கல்யாணம், ஒன்றிய இணைச் செயலாளா் கே.பாஸ்கா் உள்ளிட்ட 200 போ் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலாளா் ஆத்தூா் செல்வராஜ், ஒன்றியச் செயலாளா்கள் சந்தோஷ்குமாா், ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com