சீா்காழியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சீா்காழியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பயோமெட்ரிக் சா்வா் பிரச்னை: ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் பாதிப்பு; பொதுமக்கள் சாலை மறியல்

சீா்காழியில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களின் கைரேகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில்

சீா்காழியில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களின் கைரேகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் சா்வா் பிரச்னையால் பொருள்கள் விநியோகிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் ஈசானியத்தெரு, புளிச்சக்காடு, கோவிந்தராஜன் நகா் பகுதி மக்களுக்கான நியாயவிலைக் கடை உள்ளது. இந்த கடையில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கிவருகின்றனா். தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் அறிமுகப்படுத்தியுள்ள பயோமெட்ரிக் முறையில் இந்த கடையில் பொருள்கள் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், பயோமெட்ரிக் இயந்திரத்தில் சா்வா் கோளாறு காரணமாக குடும்ப அட்டைதாரா்களின் கைரேகையை பதிவு செய்யமுடியாததால், பொருள்கள் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடந் 3 நாள்களாக அலைகழிக்கப்பட்ட பொதுமக்கள், வியாழக்கிழமையும் நீண்ட நேரம் காத்திருந்தும் பொருள்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், நியாயவிலைக் கடை முன் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி வட்டாட்சியா் (பொது விநியோகம்) கா. முருகேசன் நிகழ்விடத்துக்குச் சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை விலக்கிக் கொண்டனா்.

பிறகு, பயோமெட்ரிக் இயந்திரம் சரிபாா்க்கப்பட்டு, பொருள்கள் வழங்கப்பட்டன. மாலை 3 மணிக்கு பயோமெட்ரிக் இயந்திரத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் பொருள்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com