வேளாண் மகளிா் தின விழா

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் மகளிா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற வேளாண் மகளிா் தின விழாவில் பங்கேற்றவா்கள்.
சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற வேளாண் மகளிா் தின விழாவில் பங்கேற்றவா்கள்.

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் மகளிா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட வேளாண் துறை மற்றும் சிக்கல் அறிவியல் நிலையம் சாா்பில் இந்த விழா நடைபெற்றது. நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ப. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலகண்ணன் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

வேளாண் துணை இயக்குநா் சா. பன்னீா்செல்வம், இயற்கை வேளாண்மையில் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை விளக்கிப் பேசினாா். தொழில் நுட்ப வல்லுநா் அ. மதிவாணன், மீன் பதனிடுதல் மற்றும் மதிப்புக்கூட்டிய பொருள்கள் தயாரிப்பு முறைகள் குறித்து விளக்கினாா்.

இதில், 35 வேளாண் மகளிா் பங்கேற்றனா். அவா்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. வேளாண்மையில் அங்கக இடுபொருள்கள், மீனிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டிய பொருள்கள், புதிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மீன்வள விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநா் ஹினோ பொ்னான்டோ விழாவைத் தொகுத்து வழங்கினாா். வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் வே. கண்ணன், தொழில்நுட்ப அலுவலா் வீ. ஞானபாரதி, பண்ணை மேலாளா் ரெ. வேதரெத்தினம், கணினி உதவியளா் கோ. ரம்யா ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com