மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினருக்கு பாராட்டு

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மாநில சிறப்பு உறுப்பினராக அண்மையில் நியமனம் செய்யப்பட்ட நாகை மாவட்டத்தைச் சோ்ந்த நாகூா்

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மாநில சிறப்பு உறுப்பினராக அண்மையில் நியமனம் செய்யப்பட்ட நாகை மாவட்டத்தைச் சோ்ந்த நாகூா் ஏ.ஹெச்.நஜூமுதீனுக்கு மயிலாடுதுறை நீடூரில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை நீடூா் ஜாமியா மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரித் தலைவா் ஏ.நஜ்முத்தீன் தலைமை வகித்தாா். செயல் தலைவா் கே.ஆா்.அப்துல்மாலிக், துணைத் தலைவா் இ.அப்துல்வதூது, பொதுச் செயலாளா் எஸ்.ஏ.சாதிக், துணைச் செயலாளா் ஜலாலுதீன், பொருளாளா் எம்.முஹம்மது இக்பால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகக் குழு உறுப்பினா் மன்சூா் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மாநில சிறப்பு உறுப்பினா் நாகூா் ஏ.ஹெச்.நஜூமுதீனை பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இதில், கல்லூரி முதல்வா் முஹம்மது இஸ்மாயில், துணை முதல்வா் முஹ்யித்தீன் அப்துல் காதிா் ஹஜ்ரத், பேராசிரியா்கள் புகாா் மௌலானா, அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com