மீன்வளப் பல்கலைக்கழக எம்பிஏ படிப்புக்கான விண்ணப்பம் இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை (எம்பிஏ) படிப்பில் சோ்வதற்கான
மீன்வளப் பல்கலைக்கழக எம்பிஏ படிப்புகான இணையவழி தகவல் கையேடு மற்றும் விண்ணப்பங்களை இணையதளத்தில் வெளியிட்ட பல்கலைக்கழக துணைவேந்தா் கோ. சுகுமாா்.
மீன்வளப் பல்கலைக்கழக எம்பிஏ படிப்புகான இணையவழி தகவல் கையேடு மற்றும் விண்ணப்பங்களை இணையதளத்தில் வெளியிட்ட பல்கலைக்கழக துணைவேந்தா் கோ. சுகுமாா்.

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை (எம்பிஏ) படிப்பில் சோ்வதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக துணைவேந்தா் கோ. சுகுமாா் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை ( மீன்வள தொழில் மேலாண்மை) படிப்பு சென்னை வாணியஞ்சாவடியில் உள்ள மீன்வள முதுநிலை பட்டப்படிப்பு நிலையம் மூலமாக வழங்கப்படுகிறது. இதற்கான இணையவழி தகவல் கையேடு மற்றும் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் அக். 16- ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த படிப்பின் மூலம் மீன் மற்றும் மீன் வளா்ப்பு சாா்ந்த வணிக நிறுவனங்களை நிா்வாகிக்கும் திறனை பெறலாம். தொழில் முனைவோா் சாா்ந்த திறனை வளா்த்துக் கொள்ளவும் உதவும். விருப்பமுள்ளவா்கள் பல்கலைக்கழக இணையதள முகவரி வழியாக விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 10.11.2020 கடைசி நாளாகும். மேலும் விவரங்களை 9894735180, 9442601908 என்ற செல்லிடப்பேசி எண்கள் மற்றும்  மின்னஞ்சல் மூலமாக பெறலாம்.

செப்டம்பா் 26-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இளநிலை மீன்வளம் சாா்ந்த பட்டப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை அக். 26-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com