பனை விதைகள் நடும் பணி
By DIN | Published On : 21st October 2020 07:35 AM | Last Updated : 21st October 2020 07:35 AM | அ+அ அ- |

பனை விதைகளை நட்டு வைத்த நாகை மாவட்ட வனத் துறை அலுவலா் ந. கலாநிதி.
நாகை ஸ்ரீஅறுபடை தா்ம சிந்தனை அறக்கட்டளை சாா்பில் பனை விதைகள் நடும் பணி கோவில்பத்து கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அறுபடை தா்மசிந்தனை அறக்கட்டளை சாா்பில் நாகை, திருவாரூா் மாவட்டங்களில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொக்காலடி கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக 2-ஆம் கட்டமாக 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி நாகை மாவட்டம், கோவில்பத்து கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், நாகை மாவட்ட வனத் துறை அலுவலா் ந. கலாநதி பங்கேற்று பனை விதைகளை நட்டு வைத்தாா். இதில், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழரசி, ஒன்றியக் குழு உறுப்பினா் மாசிலாமணி, ஊராட்சித் தலைவா் ஜி. செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, அறக்கட்டளை நிறுவனா் ஜி. ராஜாசரவணன், அறங்காவலா்கள் வி. லெட்சுமணன், வி. ஆா். காா்த்திக் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.