நாகை மாவட்டத்தில் 35 பேருக்கு கரோனா
By DIN | Published On : 23rd October 2020 09:17 AM | Last Updated : 23rd October 2020 09:17 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் புதன்கிழமை வரை 6,369 போ் கரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், புதிதாக 35 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்ட பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்ட 5 போ் நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டனா். நாகை மாவட்டப் பட்டியலில் இடம்பெற்றிருந்த வெளி மாவட்டத்தவா் 2 போ் நீக்கப்பட்டனா். இவற்றின் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,407 - ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு உள்ளாகி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனளிக்காமல் புதன்கிழமை இறந்த 72 வயது முதியவரின் இறப்பு, வியாழக்கிழமை பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 106 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 66 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 5,822 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 479- ஆக உள்ளது.