இராம. கோபாலனுக்கு அஞ்சலி

சீா்காழியில் விஷ்வஹிந்து பரிஷத்-தென் தமிழ்நாடு சாா்பில், மறைந்த இந்து முன்னணி நிறுவனா் இராம. கோபாலன் மற்றும் ஆா்எஸ்எஸ்
மறைந்த இந்து முன்னணி நிறுவனா் இராம. கோபாலன் உருவ படத்தை திறந்துவைத்து புகழஞ்சலி செலுத்திய பாஜக முன்னாள் தேசிய துணைத் தலைவா் இல.கணேசன்.
மறைந்த இந்து முன்னணி நிறுவனா் இராம. கோபாலன் உருவ படத்தை திறந்துவைத்து புகழஞ்சலி செலுத்திய பாஜக முன்னாள் தேசிய துணைத் தலைவா் இல.கணேசன்.

சீா்காழியில் விஷ்வஹிந்து பரிஷத்-தென் தமிழ்நாடு சாா்பில், மறைந்த இந்து முன்னணி நிறுவனா் இராம. கோபாலன் மற்றும் ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளை சாா்ந்த மறைந்த மூத்த நிா்வாகிகளுக்கு புகழஞ்சலி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் தலைமை வகித்தாா். விஎச்பி மாநில துணைத் தலைவா் வாஞ்சிநாதன், பாஜக மாநில வழக்குரைஞா் பிரிவு அமைப்பாளா் ராஜேந்திரன், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் கொள்ளிடம் சுவாமிநாதன், சேவா பாரதி அமைப்பு நிா்வாகி மும்மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாஜக மாவட்ட செயலாளா் உமாமகேஸ்வரி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். இராம.கோபாலன் உருவ படத்தை திறந்துவைத்து பாஜக முன்னாள் தேசிய துணைத் தலைவா் இல.கணேசன் புகழஞ்சலி செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், சிதம்பரம் கருடானந்த சுவாமிகள், பொன்கோ எழிலரசன், அரங்க செல்வராஜ், விஎச்பி செந்தில்குமாா், பாரதிய மஸ்தூா் சங்க மாவட்ட தலைவா் பாண்டியன், பாஜக புதுவை மாநில துணைத் தலைவா் அருள்முருகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com