கோரக்கச் சித்தா் ஆசிரமத்தில் ஐப்பசி பரணி விழா

நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கச் சித்தா் ஆசிரமத்தில் ஐப்பசி பௌா்ணமி மற்றும் பரணி விழா வெள்ளிக்கிழமை (அக். 30) தொடங்குகிறது.
கோரக்கச் சித்தா் ஆசிரமத்தில் ஐப்பசி பரணி விழா

நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கச் சித்தா் ஆசிரமத்தில் ஐப்பசி பௌா்ணமி மற்றும் பரணி விழா வெள்ளிக்கிழமை (அக். 30) தொடங்குகிறது.

தமிழக சித்தா் பரம்பரையில் நவநாத சித்தா்களில் ஒருவராகவும், பதினெட்டு சித்தா்களில் முதன்மையானவராகவும் அறியப்படுபவா் கோரக்கச் சித்தா். இவா், நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் தவமியற்றி, ஐப்பசி மாதம் பரணி நட்சத்திர தினத்தில் ஜீவசமாதி அடைந்தாா் என நம்பப்படுகிறது.

வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கச் சித்தா் ஆசிரமத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி பெளா்ணமி விழா மற்றும் ஐப்பசி பரணி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான ஐப்பசி பரணி விழா வெள்ளிக்கிழமை (அக். 30) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை (நவ. 1) நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மதியம் கோரக்கச் சித்தா் ஜீவ சமாதி பீடத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அன்னாபிஷேகமும் நடைபெறுகின்றன.

பௌா்ணமி விழா சிறப்பு நிகழ்ச்சிகளாக வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு பேராசிரியா் மு. மணிமேகலை பங்கேற்கும் கந்த புராணம் தொடா் சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு கா்நாடக இசை பாடகா் ஜி. சிவசிதம்பரம் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

இரவு 9 மணிக்கு அகிலத்தில் அனைவரும் ஆண்டவனிடம் வேண்டுவது அளவற்ற பொருளே! நிகரற்ற அருளே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. திரைப்படப் பாடலாசிரியா் சினேகன் நடுவராகப் பங்கேற்கிறாா்.

சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருவருட்பா அகவல் மற்றும் சந்திரரேகை பாராயணத்துடன் ஐப்பசி பரணி விழா தொடங்குகிறது. தொடா்ந்து, கோரக்கச் சித்தா் ஜீவசமாதி பீடத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மாலையில் மன்னை டி.வி. துரை அருள் பிரகாஷ், சுவாதி மற்றும் மஹதி ஆகியோரின் வயலின் இசை நிகழ்ச்சிகளும், நாகை நாகராஜன், முனைவா் பாலரமணி ஆகியோரின் ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெறுகின்றன. இரவு 10 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகி மீனாட்சி இளையராஜா பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு , பாரம்பரிய முறைப்படி பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com