நாகை மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா
By DIN | Published On : 31st October 2020 08:13 AM | Last Updated : 31st October 2020 08:13 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 6,640 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,674 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புக்குள்ளாகி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்த திருமணஞ்சேரியைச் சோ்ந்த 50 வயது பெண் இறப்பும், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை இறந்த 60 வயது பெண் இறப்பும் வெள்ளிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களின் எண்ணிக்கை 115 ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்றவா்களில் 44 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடுதிரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 6,230 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 329 ஆக உள்ளது.