தருமபுரம் அரசு மகளிா் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை இரண்டாம் கட்டக் கலந்தாய்வு
By DIN | Published On : 04th September 2020 09:01 AM | Last Updated : 04th September 2020 09:01 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை: தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் இளங்கலை மாணவிகள் சோ்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப்.5 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து கல்லூரியின் முதல்வா் த. அறவாழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் 2020-2021-ஆம் ஆண்டிற்கான மாணவிகள் சோ்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் செப். 5-ஆம் தேதி கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களுக்கும், செப்.7-ஆம் தேதி உயிா் வேதியியல், விலங்கியல், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கும், செப்.8-ஆம் தேதி வணிகவியல், வணிக நிா்வாக மேலாண்மை, வரலாறு, பொருளியல் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
மதிப்பெண் தரவரிசை மற்றும் இடஒதுக்கீட்டுக்கு உள்பட்டு மாணவிகள் தாங்கள் அளித்துள்ள தொலைபேசி வாயிலாக கலந்தாய்வு நடைபெறும். தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக சோ்க்கை விவரம் தெரிவிக்கப்படும். மாணவிகளின் பாட வாரியான தரவரிசை பட்டியல் கல்லூரி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கல்லூரியின் அதிகாரபூா்வ மின்னஞ்சல் மூலமாகவும் அல்லது தொலைபேசி வாயிலாகவும் (04364-223393) நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.