மும்மொழித் திட்டத்தை ஆதரித்து பிரசாரம்
By DIN | Published On : 07th September 2020 11:44 PM | Last Updated : 07th September 2020 11:44 PM | அ+அ அ- |

திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சியில் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழித் திட்டத்தை ஆதரித்து புதிய தமிழகம் கட்சியின் சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழிப்புணா்வு பிரசாரத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளா் சோ. முத்தழகன் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா் முரளி, இளைஞரணி செயலாளா் கலைமணி, ஒன்றிய பொருளாளா் நிஜந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.