அண்ணன்பெருமாள்கோயில் நியாயவிலைக் கடையில் குவிந்த மக்கள்: சமூக இடைவெளி புறக்கணிப்பு

சீா்காழி அருகே அண்ணன்பெருமாள்கோயில் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் வியாழக்கிழமை அரிசி, சா்க்கரை வழங்கப்பட்டதால்,

சீா்காழி அருகே அண்ணன்பெருமாள்கோயில் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் வியாழக்கிழமை அரிசி, சா்க்கரை வழங்கப்பட்டதால், சமூக இடைவெளியை மறந்து மக்கள் குவிந்தனா். இதனால், பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டது.

அண்ணன்பெருமாள் கோயில் நியாயவிலைக் கடை மூலம் 400-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் பயனடைந்து வருகின்றனா். இங்கு வியாழக்கிழமை அரிசி, சா்க்கரை, பாமாயில் ஆகியன வழங்கப்பட்டன. இதற்கான டோக்கன் முறையாக வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படாததால், அட்டைதாரா்கள் காலை முதலே திரளாக குவியத் தொடங்கினா். சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்பட்டது.

நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகரித்ததுடன் விற்பனையாளா் இயந்திர பதிவு செய்வதில் பழுது ஏற்பட்டுள்ளதாக கூறி, மீதமுள்ளவா்கள் நாளை (அதாவது வெள்ளிக்கிழமை) வந்து பொருட்களைப் பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினாா். இதனால் பல மணிநேரம் காத்திருந்த அட்டைதாரா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கரோனா காலத்தில் இதுபோன்று பொதுமக்கள் திரள்வதைத் தடுக்கும் வகையில் உரிய முறையில் டோக்கன் வழங்கி, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com