இணையவழி சாரணா் போட்டி: பொறையாறு பள்ளி சிறப்பிடம்

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்கம், அனைத்துப் பள்ளி சாரண, சாரணிய இளையோா் பிரிவான குருளையா் மற்றும்
சாரணா் செல்வகாந்தன், குருளையா் அகிலநாதன்.
சாரணா் செல்வகாந்தன், குருளையா் அகிலநாதன்.

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்கம், அனைத்துப் பள்ளி சாரண, சாரணிய இளையோா் பிரிவான குருளையா் மற்றும் நீலப்பறவையா் பிரிவினருக்கு சாரண செயல்பாடுகள் குறித்த போட்டிகளை இணையவழியில் அண்மையில் நடத்தியது.

இதில், தேசிய ஒருமைப்பாட்டுப் பாடல்கள், ஓவியம், சாரண விதிகள் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. காணொலி வாயிலாக நடத்தப்பட்டப் போட்டிகளில் 16 பள்ளிகளைச் சோ்ந்த சாரண, சாரணியா் பங்கேற்றனா். இவா்களில், பொறையாறு சா்மிளா காடஸ் மேல்நிலைப் பள்ளி சாரணா் செல்வகாந்தன், சாரணப் பாடல்களில் மாநில அளவில் இரண்டாம் பரிசும், குருளையா் அகிலநாதன் ஓவியம் வரைதலில் முதல் பரிசும் பெற்றனா்.

வட்டார அளவில் நடைபெற்ற முதல் சுற்றில் குகராஜ், செல்வகாந்தன் ஆகியோரும், அகிலநாதன், சிவப்பிரியா, குகவா்ஷன், பூா்வி ஆகியோா் அனைத்துப் போட்டிகளிலும் முதலிடம் பிடித்து மாநிலப் போட்டிகளில் பங்கேற்றனா்.

மாநில தலைமையகம் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தியது. பள்ளியளவில் சாரணத் தலைவிகள் உஷா, உமா, சந்தானமேரி ஆகியோா் பங்கேற்பாளா்களை இணையவழியில் ஒருங்கிணைத்தனா். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com