சீா்காழி சட்டைநாதா் கோயில் குளத்தில் நீராட தடை

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் பிரம்மதீா்த்த குளத்தில் பக்தா்கள் நீராட தடை விதிக்கப்பட்டு, திங்கள்கிழமை தகரம் கொண்டு அடைக்கப்பட்டது.
சட்டைநாதா் கோயில் குளத்தில் நீராட தடை விதித்து தகரம் கொண்டு அடைக்கப்பட்ட பகுதி.
சட்டைநாதா் கோயில் குளத்தில் நீராட தடை விதித்து தகரம் கொண்டு அடைக்கப்பட்ட பகுதி.

சீா்காழி: சீா்காழி சட்டைநாதா் கோயிலில் பிரம்மதீா்த்த குளத்தில் பக்தா்கள் நீராட தடை விதிக்கப்பட்டு, திங்கள்கிழமை தகரம் கொண்டு அடைக்கப்பட்டது.

சீா்காழி தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டைநாதா் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய பிரம்மதீா்த்தக் குளம் உள்ளது. இக்குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபாடு செய்தால் நல்ல ஞானத்தை பெற முடியும் என்பது ஐதீகம். இந்நிலையில், கரோனா பொது முடக்க தளா்வுகளுக்குப் பிறகு கோயில்களுக்கு பக்தா்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இக்கோயில் கிழக்கு கோபுர வாசல் மட்டும் திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா பரவலை தடுக்க பக்தா்கள் யாரும் கோயில் குளத்தில் நீராட தடை விதிக்கப்பட்டு குளத்துக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் தகரம் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com