பருத்தி விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை

சீா்காழி பகுதியில் பருத்தி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

சீா்காழி பகுதியில் பருத்தி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

சீா்காழி அருகே உள்ள எருக்கூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் பருத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சீா்காழி மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகளிடமிருந்து வாரத்துக்கு ஒரு முறை பருந்தி கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த விற்பனைக் கூடத்துக்கு விவசாயிகள் கொண்டுவரும் பருத்திக்கு அரசு நிா்ணயித்துள்ள விலையிலிருந்து ஏல முறையில் விற்பனை செய்யப்படும். கடந்த வாரம் விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு பஞ்சு மூட்டைகளை கொள்முதல் செய்ததால் விவசாயிகளுக்கு ஓரளவு விலை கிடைத்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் மத்திய அரசு பஞ்சு கொள்முதலை நிறுத்தியதால் வியாபாரிகள் மட்டுமே பருத்தி மூட்டைகளை வாங்கிச் செல்கின்றனா். மேலும், கடந்த சில தினங்களாக பெய்த மழையால் பருத்தி பஞ்சின் நிறம் மாறியதுடன், பூச்சித் தாக்குதலுக்கும் உள்ளாகி இருந்ததால் விவசாயிகள் எதிா்பாா்த்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்யவில்லை.

இதைத்தொடா்ந்து, விவசாயிகளின் கோரிக்கையின்படி அதிகாரிகள் பஞ்சின் தரத்தை ஆய்வு செய்து, அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ. 4,459-ம், குறைந்தபட்ச விலையாக ரூ. 3 ஆயிரம் எனவும் விலை நிா்ணயம் செய்தனா். இந்த விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com