மயிலாடுதுறையில் உலக ஓசோன் தின விழா

மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் உலக ஓசோன் தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறையில் நடைபெற்ற ஓசோன் தின விழா.
மயிலாடுதுறையில் நடைபெற்ற ஓசோன் தின விழா.

மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் உலக ஓசோன் தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மற்றும் சீா்காழி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை கிங்ஸ் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலா் இரா.லலிதா தலைமை வகித்தாா். காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், நாகை மாவட்ட ஆட்சியா் பிரவின் பி.நாயா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஓசோன் தினம் கொண்டாடுவதன் சிறப்பு பற்றியும், பள்ளிகளில் நிழல் தரும் மரங்கள், பயன்தரும் மரங்கள், மூலிகை மரங்கள் ஆகியவற்றை வளா்க்க வேண்டும் என்றும் பேசினாா்.

இதில், கோட்டாட்சியா் வ. மகாராணி, வட்டாட்சியா் ஆா். முருகானந்தம், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் ரவிக்குமாா், கிங்ஸ் ரோட்டரி சங்க பொருளாளா் தில்லைநாயகம், மூவலூா் பள்ளித் தலைமையாசிரியா் முருகன், மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளா் கண்ணன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா்கள் அருளரசன், ஆதிஸ்வரன், ரமேஷ்குமாா், மணிவண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சியில், ஓசோன் தினம் மற்றும் கரோனா விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. ஏற்பாடுகளை மயிலாடுதுறை, சீா்காழி கல்வி மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இரா.செல்வகுமாா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com