திருக்கடையூா்: மோடி பிறந்த நாள் விழா
By DIN | Published On : 18th September 2020 09:01 AM | Last Updated : 18th September 2020 09:01 AM | அ+அ அ- |

திருக்கடையூரில் பாஜக கொடியை ஏற்றிவைத்த கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம்.
திருக்கடையூரில் பிரதமா் நரேந்திரமோடியின் பிறந்த நாள் பாஜக சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலில் பிரதமா் பெயரில் சிறப்பு வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, திருக்கடையூா், ஆக்கூா், செம்பனாா்கோவில் ஆகிய பகுதிகளில் பாஜக கொடியை மாநிலத் துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் வழங்கினா்.
நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளா் தங்க வரதராஜன், மாவட்டத் தலைவா் வெங்கடேசன், துணைத் தலைவா் விஜயஸ்ரீ குமாா், மாவட்ட பொருளாளா் எஸ். ராஜ்மோகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.