முருங்கை சாகுபடியை அதிகப்படுத்த கள ஆய்வு

வேதாரண்யம் அருகேயுள்ள வேட்டைக்காரனிருப்பில் முருங்கை சாகுபடியை அதிகப்படுத்த தோட்டக்கலைத் துறையினா் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.
முருங்கை சாகுபடியை மேம்படுத்தவது குறித்து கள ஆய்வு மேற்கொண்ட உதவி ஆட்சியா் தீபனா விஸ்வேஸ்வரி தலைமையிலான குழுவினா்.

இந்த ஆய்வில், உதவி ஆட்சியா் (பயிற்சி) தீபனா விஸ்வேஸ்வரி ஈடுபட்டு, முருங்கையின் முக்கியத்துவம் மற்றும் அதை மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்றி சந்தைப்படுத்தினால் அதிக லாபம் ஈட்டலாம் என்பதால் விவசாயிகள் முருங்கையை அதிகமாக சாகுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தாா்.

ஆய்வின்போது கீழ்வேளூா், கீழையூா் ஒன்றியத்தின் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ரா. திவ்யா, சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் தோட்டக் கலைத்துறை தொழில்நுட்ப வல்லுநா் க. ரகு, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் ரா. சாமிநாதன், ரெ. ஜெயக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். தொடா்ந்து, கீழ்வேளூா் ஒன்றியம் மோகனூா், கீழையூா் ஒன்றியம் விழுந்தமாவடி கிராமத்திலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com