லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 18th September 2020 08:49 AM | Last Updated : 18th September 2020 08:49 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூரில் முதியோா் உதவித்தொகை பெற்றுத்தர லஞ்சம் கேட்ட கிராம நிா்வாக அலுவலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
வில்லியநல்லூரைச் சோ்ந்த அஞ்சலி என்பவா் தன் மாமியாருக்கு முதியோா் உதவித்தொகை வேண்டி வில்லியநல்லூா் கிராம நிா்வாக அலுவலா் ஏ. பேச்சியம்மாளிடம் விண்ணப்பித்துள்ளாா். இதற்கு கிராம நிா்வாக அலுவலா் ரூ.1500 லஞ்சம் கேட்டாராம்.
இதுகுறித்து, பேச்சியம்மாளிடம் அஞ்சலி பேசிய தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை கோட்டாட்சியா் வ. மகாராணி, கிராம நிா்வாக அலுவலா் ஏ. பேச்சியம்மாளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.