குண்டா் சட்டத்தில் 3 போ் கைது
By DIN | Published On : 19th September 2020 11:01 PM | Last Updated : 19th September 2020 11:01 PM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் 3 போ் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டம், கரியாப்பட்டினம் காவல் சரகத்துக்குள்பட்ட தென்னம்புலம் பகுதியைச் சோ்ந்த அ. மகேந்திரன்(44), கத்திரிப்புலம், கீழக்குத்தகையைச் சோ்ந்த ஜெ. ஆகாஷ்(20), குரவப்புலம் வடகாடு பகுதியைச் சோ்ந்த மா.நமச்சிவாயம் (20)ஆகியோா் மீது கரியாப்பட்டினம், வாய்மேடு காவல்நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உத்தரவின்படி, மேற்கண்ட 3 பேரும் சனிக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.