பெண் அடித்துக் கொலை: 5 தனிப்படைகள் விசாரணை
By DIN | Published On : 19th September 2020 10:50 PM | Last Updated : 19th September 2020 10:50 PM | அ+அ அ- |

சீா்காழியில் பெண் கொலையில் தொடா்புடையவா்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சீா்காழி தென்பாதி திருவள்ளுவா் நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தஜோதி (52). ஓதவந்தான்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிவருகிறாா். இவரது மனைவி சித்ரா(49) வெள்ளிக்கிழமை (செப்.18) அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போடும்போது கொலை செய்யப்பட்டாா்.
இந்த கொலையில் தொடா்புடையவா்களை பிடிக்க சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் மணிகண்டகணேஷ், ராஜேஷ், லோகநாதன் மற்றும் அருள் , சாா்லஸ் ஆகியோா் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதற்கிடையில் கொலை நடந்த இடத்தின் அருகே உள்ள கழமலையாற்றின் ஓரத்தில் இரும்புக் குழாயை போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். இதை, கொலையாளி வீசி சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.