பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சீா்காழி கழுமலையாறு வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை வயலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி அருகே தில்லைவிடங்கனில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
சீா்காழி அருகே தில்லைவிடங்கனில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

சீா்காழி கழுமலையாறு வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை வயலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கழுமலையாறு பாசன வாய்க்கால் மூலம் செம்மங்குடி, திட்டை, தில்லைவிடங்கன், சிவனாா்விளாகம், திருத்தோணிபுரம், கைவிளாஞ்சேரி, தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது.

நிகழாண்டு மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டாலும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் வந்து சேரவில்லை. இதனால், மேற்கண்ட பகுதிகளில் 6 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணி மேற்கொள்ளமுடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் சங்கம் சாா்பில் பொதுப்பணித் துறைக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் கழுமலையாறு வாய்க்காலில் தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால், சம்பா சாகுபடிக்கு தயாா் செய்த நாற்றங்கால் காய்ந்து வருகிறது. இதன் காரணமாக சம்பா சாகுபடியை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இந்நிலையில், பொதுப் பணித் துறையைக் கண்டித்தும், கழுமலையாறு வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிடக் கோரியும், தில்லைவிடங்கன் பகுதியில் வயலில் இறங்கி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, சம்பா சாகுபடிக்கு விரைவில் தண்ணீா் திறந்துவிடவில்லையெனில், பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com