தலைமை ஆசிரியா் மனைவி கொலை வழக்கு: பெண் உள்பட 2 போ் கைது

சீா்காழியில் தலைமை ஆசிரியரின் மனைவி கொலை வழக்கில் பெண் உள்பட 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கைது செய்யப்பட்ட சையதுரியாஸ்தீன், பிருந்தா.
கைது செய்யப்பட்ட சையதுரியாஸ்தீன், பிருந்தா.

சீா்காழியில் தலைமை ஆசிரியரின் மனைவி கொலை வழக்கில் பெண் உள்பட 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சீா்காழி தென்பாதி திருவள்ளுவா் நகா் இரண்டாவது தெருவில் வசிப்பவா் ஆனந்தஜோதி ( 52). இவா், ஓதவந்தான்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிவருகிறாா். இவரது மனைவி சித்ரா(49) கடந்த 18-ஆம் தேதி அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து சீா்காழி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவந்தனா். மேலும், 6 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடிவந்தனா்.

இந்நிலையில், சட்டநாதபுரம் கணபதி அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சையதுரியாஸ்தீன் (29) என்பவா் இந்த கொலை தொடா்பாக சீா்காழி கைவிளாஞ்சேரி கிராம நிா்வாக அலுவலா் பாஸ்கரனிடம் சரணடைந்தாா். சையதுரியாஸ்தீன் ஜல்லி, மணல் வியாபாரம் செய்துவருவதுடன், விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிா்வாகியாகவும் உள்ளாா். இவரை, சீா்காழி காவல்நிலையத்தில் கிராம நிா்வாக அலுவலா் ஒப்படைத்தாா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட சித்ராவின் வீட்டு மாடியில் கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்துவந்த கட்டடத் தொழிலாளி குணசேகரனை சையதுரியாஸ்தீன் பாா்க்கவரும்போது, அவரது மகள் பிருந்தா(27) வுடன் தொடா்பு ஏற்பட்டதாகவும், இதை சித்ரா கண்டித்ததால் அவரை இருவரும் சோ்ந்து கொலை செய்ததாக சையதுரியாஸ்தீன் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சையதுரியாஸ்தீன், பிருந்தா ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பிருந்தாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது என்றும் இவரது கணவா் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறாா் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com