மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாத கச்சா எண்ணெய்க் கிணறுகளை மூட வலியுறுத்தல்

தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாத கச்சா எண்ணெய் கிணறுகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாத கச்சா எண்ணெய் கிணறுகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன் புதன்கிழமை கூறியது:

திருவாரூா் மாவட்டம், கீழஎருக்காட்டூரில் ஓஎன்ஜிசியின் எண்ணெய்க் குழாய் உடைப்பால் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் கசிவுகளை பூமிக்கு மேல்பரப்பில் மட்டுமே சுத்தம் செய்ய முடியும். பூமிக்கு அடியில் நிலத்தடிநீா் வீணாவதை தடுக்க முடியாது. கொராடாச்சேரி, கோட்டூா், குடவாசலில் மட்டும் 100 கிணறுகளை இந்நிறுவனம் அமைத்துள்ளது.

காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அந்த சட்டத்தில் பழைய திட்டங்கள் தொடரும் என்று கூறியுள்ளதால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. காவிரிப்படுகையில் 700 கிணறுகள் அமைத்துள்ளதாகவும் அவற்றில் 153 கிணறுகள் செயல்பாட்டில் உள்ளதாகவும் ஒஎன்ஜிசி கூறுகிறது. ஆனால் 219 கிணறுகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 71 கிணறுகள் செயல்பாட்டில் உள்ளதாகவும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாத ஒஎன்ஜிசியின் எண்ணெய்க் கிணறுகளையும் மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com