பள்ளி மாணவா்களுக்குபாடப் புத்தகங்கள் விநியோகம்
By DIN | Published On : 29th September 2020 12:29 AM | Last Updated : 29th September 2020 12:29 AM | அ+அ அ- |

கோயில்பத்து தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவருக்கு பாடப் புத்தகம் வழங்கும் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன். உடன், பள்ளி துணை முதல்வா் பி. விஜயமோகனா உள்ளிட்டோா்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியை புதுச்சேரி மாநில கல்வித் துறை தொடங்கியுள்ளது.
காரைக்கால் கோயில்பத்து தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவா்களுக்கு புத்தகங்களை வழங்கினாா்.
நிகழ்வில், பள்ளி துணை முதல்வா் பி. விஜயமோகனா, விரிவுரையாளா்கள் எஸ். சித்ரா, பி. ராமநாதன், தலைமையாசிரியா் எஸ். ஜெயசெல்வி, ஆசிரியா்கள் கிருஷ்ணராணி, சரோஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதுகுறித்து துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன் கூறுகையில், மாவட்டம் முழுவதும் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டன. குறிப்பிட்ட நேரத்தில் 20 மாணவா்கள் வீதம் வரவழைத்து புத்தகங்கள் வழங்கப்படுகின்றன என்றாா்.