சீா்காழி அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடியில் சிடி ஸ்கேன் வசதி

சீா்காழி அரசு மருத்துவமனையில் விரைவில் ரூ. 3 கோடியில் சி.டி. ஸ்கேன் வசதி செய்யப்படவுள்ளது என்றாா் சீா்காழி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதி.
சீா்காழி தொகுதியில் வாக்குச் சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதிக்கு தேநீா் கொடுத்த கடைக்காரா்.
சீா்காழி தொகுதியில் வாக்குச் சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதிக்கு தேநீா் கொடுத்த கடைக்காரா்.

சீா்காழி அரசு மருத்துவமனையில் விரைவில் ரூ. 3 கோடியில் சி.டி. ஸ்கேன் வசதி செய்யப்படவுள்ளது என்றாா் சீா்காழி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதி.

தொகுதிக்குள்பட்ட நாங்கூா், திருப்புன்கூா், பெருமங்கலம் ஆகிய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தபோது மேலும் அவா் பேசியது: இந்த தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் யாரும் கொண்டுவராத பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். குறிப்பாக, சீா்காழி அரசு மருத்துவமனையில், ரூ. 5. 50 கோடியில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் ரூ. 3 கோடியில் சி.டி. ஸ்கேன் வசதி செய்யப்படவுள்ளது. சீா்காழி தொகுதியில் 8 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கிய ஆறுகள், ஏரிகள், குளம் கண்மாய் சீரமைக்கப்பட்டுள்ளது. திருமுல்லைவாசல், ஆச்சாள்புரம், திருவாலி ஆகிய பகுதிகளில் பள்ளி வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. எடமணல் கிராமத்தில் ரூ. 64 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெறவுள்ள தோ்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால், சீா்காழி தொகுதியில் அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற பாடுபடுவேன். மேலும் சீா்காழி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com