செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருமருகல் செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
செல்லியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகம்.
செல்லியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகம்.

திருமருகல் செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், செல்லியம்மன், விக்ன விநாயகா், வீரன், நாகா் ஆகிய சுவாமிகள் அருள்பாலித்து வருகின்றனா். பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன.

இதையடுத்து, கும்பாபிஷேகத்தையொட்டி, மாா்ச் 28-ஆம் தேதி தேவதானுக்ஞை யஜமானா் சங்கல்பம்தன பூஜை, கோ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, மாா்ச் 29, 30 ஆகிய தேதிகளில் விழாவுக்கான பூா்வாங்க அனைத்து பூஜைகளும் செய்து முடிக்கப்பட்டு புதன்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டது. முற்பகல் 11 மணியளவில் கோயில் விமான கோபுர க லசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்ட கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலஸ்தான அபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை, எஜமானா் ஆச்சாரிய உத்ஸவம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com