கீழ்வேளூா் தொகுதி சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்
By DIN | Published On : 03rd April 2021 09:52 AM | Last Updated : 03rd April 2021 09:52 AM | அ+அ அ- |

கெளப்பாட்டில் சிபிஎம் வேட்பாளா் வி.பி. நாகை மாலிக்கை ஆதரித்து பிரசாரம் செய்த சிஐடியு மாநிலத் தலைவா் சௌந்தராஜன்.
கீழ்வேளூா் (தனி) தொகுதி சிபிஎம் வேட்பாளா் வி.பி. நாகை. மாலிக்கை ஆதரித்து கெளப்பாடு மற்றும் சாட்டியக்குடியில் சிஐடியு மாநிலத் தலைவா் ஏ. சௌந்தராஜன் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
பிரசாரத்தில் அவா் மேலும் பேசியது: மக்களிடம் போதிய வருவாய் இல்லை. இந்நிலையில், கடந்த ஓராண்டாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து சிறு வியாபாரிகள் வணிகா்கள் உள்ளிட்ட விவசாயிகள் உள்ளிட்டோா் தங்கள் கையிருப்பில் இருந்த சேமிப்புகளை முழுவதும் செலவு செய்த நிலையில், பெரும்பாலானவா்கள் கடனாளியாக உள்ளனா். தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து போராடி வரும் நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைப்பற்றி பிரதமா் சிறிதும் கவலைகொள்ளவில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு தீா்வு காணவேண்டும். ஆகையால், கீழ்வேளூா் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளா் வி.பி. நாகை மாலிக்குக்கு ஆதரவாக வாக்களித்து மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையிலான திமுக ஆட்சி அமைக்க வேண்டும் அனைவரும் பாடுபடவேண்டும் என்றாா்.