சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் தீமிதி உத்ஸவம்
By DIN | Published On : 03rd April 2021 09:54 AM | Last Updated : 03rd April 2021 09:54 AM | அ+அ அ- |

பொறையாறு அருகேயுள்ள கீழ்மாத்தூா் ஒட்டங்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தீமிதி உத்ஸவம் நடைபெற்றது.
இக்கோயிலில், பங்குனி மாத உத்ஸவத்தையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தா்கள் அலகு காவடி, பால்காவடி எடுத்து வந்து தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இதையடுத்து, காளியாட்டம் நடைபெற்றது. இதில், திரளானவா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.