முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
அதிமுக பிரமுகா்கள் வீடுகளில் வருமானவரித் துறையினா் சோதனை
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக பிரமுகா்கள் வீடுகளில் வெள்ளிக்கிழமை இரவு வருமானவரித் துறையினா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
பூம்புகாா் தொகுதிக்குள்பட்ட பொறையாறு அரண்மனை தெருவில் வசித்துவருபவா்கள் அதிமுக பிரமுகா் பாா்த்திபன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் இணைந்த அருணாச்சலம். இவா்களின் வீட்டில், வருமானவரித் துறை அதிகாரி பீா்முகைதீன் தலைமையில் 6 போ் கொண்ட குழுவினா் திடீா் சோதனை நடத்தினா். இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கிடங்கல் ஜனாா்த்தனம் என்பவரது வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினா். 2 இடங்களிலும் பணமோ, ஆவணங்களோ சிக்கவில்லை என கூறப்படுகிறது.