முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
பாமக வேட்பாளருக்கு வாக்குச் சேகரிப்பு
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

திருக்குவளை பகுதியில் கீழ்வேளூா் தொகுதி (தனி) பாமக வேட்பாளா் எஸ். வடிவேல் ராவணனுக்கு ஆதரவாக தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சியினா் சனிக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.
தொகுதிக்குள்பட்ட காருகுடி, தெற்குத்தெரு, வடக்குத்தெரு சமத்துவபுரம், திருக்குவளை கடைத்தெரு, வடுகூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக, பாமக, பாஜக, தமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் வீடு வீடாக சென்று மாம்பழம் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தனா்.