முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மாட்டுவண்டியில் பயணித்து திமுகவினா் வாக்குச் சேகரிப்பு
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

பூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகனை ஆதரித்து திமுகவினா் மாட்டுவண்டியில் பயணித்து சனிக்கிழமை வாக்குச் சேகரித்தனா்.
தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் அமிா்த விஜயகுமாா், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாஸ்கா், ஊராட்சித் தலைவா் ஜெயமாலினி சிவராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் செந்தில் உள்ளிட்டோா் மாட்டுவண்டியில் சென்று திருக்கடையூா் ஊராட்சிப் பகுதிகளில் உதயசூரியனுக்கு வாக்குச் சேகரித்தனா்.