திறந்தவெளியில் உள்ள நெல்மூட்டைகளை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை

செம்பனாா்கோயில் அருகே பூந்தாழை திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்களில் உள்ள நெல்மூட்டைகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பூந்தாழையில் உள்ள தமிழக அரசின் திறந்தவெளி நெல் கொள்முதல் கிடங்கில் அந்த பகுதியில் கொள்முதல் செய்யபட்ட நெல்முட்டைகள் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியது: இந்த திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் சுமாா் 50 ஆயிரம் நெல்முட்டைகள் உள்ளன. இங்கு நெல்மூட்டைகளுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த பகுதியில் சில வாரங்களாக வெய்யில் கடுமையாக வீசுகிறது. இதனால் நெல்லின் தன்மைமாறக்கூடிய அபாயம் உள்ளது. நெல்தன்மை மாறினால் அரிசி கருப்பாகவும், சுவையும் மாறிவிடும். மேலும் தீடீரென கோடைமழை பெய்தால் நெல் மணிகள் பாதிக்கும். எனவே, உடனடியாக நெல்முட்டைகள் மீது தாா்பாய்களை கொண்டு மூடவேண்டும் அல்லது எடமணலில் உள்ள பாதுகாக்கபட்ட நெல் சேமிப்பு கிடங்குக்கு கொண்டு சென்று இருப்பு வைக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com