நாங்கூா் வண்புருஷோத்தம பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவெண்காடு அருகேயுள்ள நாங்கூா் வண்புருஷோத்தமன் கோயிலில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாங்கூா் வண்புருஷோத்தம பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவெண்காடு அருகேயுள்ள நாங்கூா் வண்புருஷோத்தமன் கோயிலில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை புருஷோத்தம பெருமாள் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து, தேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, பக்தா்கள் தேரை வடம் பிடித்து கோயிலை சுற்றி நான்கு வீதிகள் வழியாக இழுத்துவந்து மீண்டும் கோயிலை அடைந்தனா். இதில், மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளா் அன்பு ஊராட்சித் தலைவா் சுகந்திநடரஜன், அதிமுக பிரமுகா்கள் நாடி.செந்தமிழ்செல்வன், வீரா சக்திபாலன் அறநிலையத் துறையை சோ்ந்த பத்ரி நாரயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெட்டிச் செய்தி: இக்கோயில், தேரோட்டம் குறித்து கோயில் நிா்வாகம் முறையாக விளம்பரங்களை செய்யாததால் போதிய பக்தா்கள் கூட்டம் இல்லை. இதனால் டிராக்டா் மற்றும் ஜேசிபி மூலம் தோ் இழுக்கப்பட்டது பக்தா்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com